Paristamil Navigation Paristamil advert login

தேசிய கல்வித்துறையில் 4,000 பணியிடங்கள் நீக்கம்!..??! - பின்வாங்கும் அரசாங்கம்!!

தேசிய கல்வித்துறையில் 4,000 பணியிடங்கள் நீக்கம்!..??! - பின்வாங்கும் அரசாங்கம்!!

16 தை 2025 வியாழன் 11:00 | பார்வைகள் : 872


தேசிய கல்வித்துறையில் ( l'Éducation nationale) 4,000 பணியிடங்கள் நீக்கப்பட உள்ளதாக முன்னாள் பிரதமர் மிஷல் பார்னியே அறிவித்த நிலையில், தற்போது அந்த திட்டத்தை கைவிட எத்தனித்துள்ளதாக புதிய பிரதமர் பிரான்சுவா பெய்ரூ அறிவித்துள்ளார்.

“தேசிய கல்வியில் 4,000 பணியிடங்களை நீக்கும் திட்டத்தை கைவிட நான் தயாராக இருக்கிறேன்” என பிரதமர் பிரான்சுவா பெய்ரூ நேற்று ஜனவரி 15, புதன்கிழமை அறிவித்தார். முன்னதாக அரசாங்கம் உருவாக்கிய வரவுசெலவுத்திட்டத்தில் பெருவாரியாக தொகையை சேமிக்கும் பொருட்டு, தேசிய கல்வித்துறையில் 4,000 பணியிடங்களை நீக்க அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கு உடனடியாக எதிர்ப்பும் எழுந்திருந்தது.

இந்நிலையில், இந்த பணியிட நீக்கம் தொடர்பில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பொது கொள்ளை விளக்க உரையில் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ எதனையும் அறிவிக்கவில்லை.

அதை அடுத்து, நேற்று புதன்கிழமை மேற்படி தகவலை வெளியிட்டார். தேசிய கல்வித்துறையை பாதுகாக்கும் பொருட்டு, இந்த பணிநீக்க திட்டத்தை கைவிட உள்ளேன் என அவர் அறிவித்தார். அதை அடுத்து இதனை இடதுசாரி கட்சியினர் வரவேற்றுள்ளனர்.

(புகைப்படத்தில், முன்னாள் பிரதமரும், தற்போதைய கல்வி அமைச்சருமான Elisabeth Borne)

எழுத்துரு விளம்பரங்கள்