Paristamil Navigation Paristamil advert login

Gervais Raoul Lufbery - ஒரு போர்விமானியின் கதை!!

Gervais Raoul Lufbery - ஒரு போர்விமானியின் கதை!!

10 சித்திரை 2018 செவ்வாய் 11:30 | பார்வைகள் : 19241


Gervais Raoul Lufbery.... பிரான்சுக்கும் அமெரிக்கவுக்கும் சொந்தமான ஒரு போர் விமானி. சுருக்கமாக Raoul...!! 
 
1876 ஆம் வருடம். Edward Lufbery எனும் அமெரிக்கர் பிரான்சின் Chamalières, (Puy-de-Dôme,) நகருக்கு பிழைப்பு தேடி வருகின்றார். வந்தவருக்கு ஒரு சொக்கலேட் நிறுவனத்தில் வேலை கிடைக்கின்றது. 
 
சொக்கலேட் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும் போது, , Anne Joséphine Vessière எனும் பிரெஞ்சு பெண்ணை சந்திக்கின்றார். இருவருக்கும் பழக்கம் நெருக்கமாகி, காதலாகி... பின்னர் அப்பெண்ணையே திருமணம் செய்துகொள்கிறார். 
 
அவர்களின் காதலுக்கு சான்றாக மூன்று பிள்ளைகள் பிறக்கின்றன. அவர்களில் மூன்றாமவன் தான் இத்தொடரின் நாயகன். பெயர் Gervais Raoul!! 
 
ஆனால், சில நாட்களில் Gervais Raoul இன் தாயார் இறந்துவிட... அவனது வாழ்வில் புயல் வீசுகிறது. மனைவியை இழந்த சோகத்தோடு, தாம் அமெரிக்கவுக்கு சென்றுவிட்டு திரும்பி வருவதாக குறிப்பிட்டு தன் மூன்று குழந்தைகளையும் மனைவியின் தாயரிடம் ஒப்படைத்துவிட்டு விமானத்தில் ஏறினார் தந்தை Edward Lufbery!! 
 
சென்றவர்... சென்றவர்தாம்... திரும்பவேயில்லை!! மூன்று சகோதர்களும் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கிளைக்கதைகள் முளைத்தன. 
 
கதையின் நாயகன் Raoul, தனது தந்தை பணி புரிந்த சொக்கலேட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கின்றான். மூத்த சகோதரன் தனது தந்தையை தேடி கண்டுபிடிக்கும் நோக்கோடு அமெரிக்காவுக்குச் செல்கின்றான். 
 
சில வருடங்கள் சொக்கலேட் நிறுவனத்தில் பணி புரிந்த Raoul, பின்னர் தனது அம்மம்மாவுக்குத் தெரியாமல் தனது 17 வது வயதில் வீட்டை விட்டு ஓடுகின்றான். 
 
ஓடியவன் எகிப்த், அல்ஜீரியா, துனிஷியா, துருக்கி என நாடு நாடுகளாக சுற்றித்திரிகின்றான்.  
 
நாளை...
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்