Paristamil Navigation Paristamil advert login

Essonne : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

Essonne : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

16 தை 2025 வியாழன் 14:01 | பார்வைகள் : 6864


Les Ulis (Essonne) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை இரவு இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.

அங்குள்ள கட்டிடம் ஒன்றின் வாசலில் வைத்து நேற்று ஜனவரி 15, புதன்கிழமை இரவு சரமாரி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. அதில் வயது குறிப்பிடப்படாத ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டு அவர்கள் அங்கு வந்தடையும் முன்னர், குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7.65 மி.மீ கலிபர் வகை துப்பாக்கியால் அவர் ஏழு தடவைகள் சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகள் அரம்பிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்