பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம் மீது இன்று நம்பிக்கை இல்லா பிரேரணை வாக்கெடுப்பு!
16 தை 2025 வியாழன் 14:09 | பார்வைகள் : 946
பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம் மீது இன்னும் சில மணிநேரங்களில் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட உள்ளது.
செவ்வாய்க்கிழமை அரசாங்கத்தின் புதிய கொள்கை விளக்க உரையை வாசித்த பிரதமர் மீது, மூன்று அரசியல் கட்சிகள் நம்பிக்கை இல்லா பிரேரணை (motion de censure) கொண்டுவந்திருந்தன. அதை அடுத்து, இன்று வியாழக்கிழமை பிற்பகல் முதல் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்று, அதன் பின்னர் மாலை 5.30 மணி அளவில் வாக்கெடுப்பு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவாக சோசலிச கட்சி (socialistes) பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கப்போவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு எதிராக 53 வாக்குகளும், ஆதரவாக 10 வாக்குகளும், 2 உறுப்பினர்கள் வாக்களிக்கப்போவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் பிரான்சுவா பெய்ரூ சற்று முன்னர் பிரதமர் மாளிகையில் இருந்து சட்டமன்றம் நோக்கி மகிழுந்தில் புறப்பட்டுள்ளார்.