Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் முக்கிய வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலகல்

கனடாவில் முக்கிய வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலகல்

16 தை 2025 வியாழன் 15:20 | பார்வைகள் : 374


கனடா நாட்டின் பிரதமரும் லிபரல் கட்சியின் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய தலைவர் ஒருவரை தெரிவு செய்ய முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 அந்த வகையில் சில முக்கிய வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

கிறிஸ்டியா ஃப்ரீ லேண்ட், கரீனா கோல்ட் மற்றும் மார்கெனரி ஆகியோர் கட்சி தலைமை பொறுப்பிற்கு போட்டியிட உள்ளனர் என தெரிய வருகிறது.

குறித்து அதிகாரபூர்வமாக அவர்கள் இன்னமும் அறிவிக்கவில்லை.

ஏற்கனவே சில சிரேஷ்ட அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் கட்சித் தலைவர் பதவிக்காக போட்டியிடப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளனர்.

அந்த நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் முதல்வர் கிறிஸ்டி கிளார்க் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமான ஒரு பிரசாரத்தை செய்வதற்கு கால அவகாசம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தான் தலைமைத்துவ பதவிக்காக போட்டியிட போவதில்லை என தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் அமைச்சர் சாம்பெனும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். 
 

எழுத்துரு விளம்பரங்கள்