Paristamil Navigation Paristamil advert login

சாம்பியன்ஸ் டிராபி தொடர்பில் ஸ்ரீகாந்த் கருத்து

சாம்பியன்ஸ் டிராபி தொடர்பில் ஸ்ரீகாந்த் கருத்து

16 தை 2025 வியாழன் 15:52 | பார்வைகள் : 252


அடுத்த மாதம் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி-யில் பும்ராவுக்கு மாற்று வீரராக புவனேஸ்வர் குமாரை களமிறக்கலாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 19-ஆம் திகதி தொடங்கி மார்ச் 9-ஆம் திகதி வரை நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான தீவிரமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கும் நிலையில், குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

பெரும்பாலான அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை அறிவித்துவிட்ட நிலையில், இந்திய அணி தனது அணியை அறிவிக்க ஐசிசி விதித்த காலக்கெடுவை நீட்டித்துள்ளது.


இதனிடையே, இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, முதுகு காயம் காரணமாக லீக் ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பும்ரா இல்லாத இடத்தை நிரப்ப, அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தகுதியானவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ஶ்ரீகாந்த் தெரிவித்துள்ள கருத்தில், “இன்றைக்கும் புவனேஸ்வர் குமார் களத்தில் இரண்டு பக்கங்களும் பந்தினை ஸ்விங் செய்யும் திறனை கொண்டுள்ளார். 2022-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய புவனேஸ்வர் குமாரை தற்போது இந்திய அணி மறந்தே விட்டது”.

என்னை பொறுத்தவரை பும்ரா அணிக்கு திரும்பவில்லை என்றால் அவரது இடத்தை நிரப்ப புவனேஸ்வர் குமாரை தேர்ந்தெடுப்பது அணிக்கு நல்ல முடிவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்