Paristamil Navigation Paristamil advert login

ஐம்பது பேர்களும் ஒரு பிரெஞ்சுத் தீவும்!!

ஐம்பது பேர்களும் ஒரு பிரெஞ்சுத் தீவும்!!

9 சித்திரை 2018 திங்கள் 14:30 | பார்வைகள் : 18425


பிரான்சின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் பல தீவுகள் உலகம் முழுவதிலும்  உள்ளன. இன்று நூறு ஹெக்டேயர்கள் அளவு உள்ள ஒரு தீவு குறித்து பார்க்கலாம். 
 
பிரான்சின் வடமேற்கு கடற்கரை பகுதி அது. 
Normandy மாகாணத்தில் உள்ள Manche மாவட்டத்துக்கு சொந்தமான நிலப்படுகுதி தீவு அது.  Manche கடற்கரையில் இருந்து 600 மீட்டர்கள் கடலில் பயணித்தால், அங்கே Le Mont Saint-Michel எனும் அந்த குட்டித்தீவு உங்களுக்கு தென்படும். 
 
அது ஒரு சுற்றுலாத்தலமோ... 'ஸ்பெஷலான' இடமோ இல்லை.. கற்பாறைகளும் ஒரு சில மரங்களும் ஒரு பழங்கால கட்டிடமும் கொண்ட ஒரு தீவு!! 
 
தீவின் மொத்த அளவே 0.97 சதுர கிலோமீட்டர்கள் தான். விஷயம் என்னவென்றால்...  2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி, இந்த தீவில் மொத்தம் 50 பேர் வசிக்கின்றனர். 
 
அந்த ஐம்பது பேர்களும் Manche நகரத்துக்கு படகில் வந்து செல்வார்கள். மருத்துவமனை வசதி கூட இல்லாத அந்த தீவில், ஒரு பாம்பு பூச்சி கடித்தால் கூட Manche நகருக்குத் தான் வரவேண்டும். 
 
காலையில் ஒரு ஒரு 'வாக்கிங்' சென்றுவிட்டு வரலாம் என்றால் கூட ஓடிப்போய் கடலில் தான் விழவேண்டும். அத்தனை குட்டித்தீவு அது. அப்படி இருந்தும், நாங்கள் அத்தீவில் தான் வசிப்போம் என அடம்பிடித்து இருக்கிறார்கள் குறித்த மக்கள்..!! 
 
சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் அங்கு செல்வதில்லை என்ற போதும், அவ்வப்போது வந்து செல்லும் சுற்றுலாப்பயணிகளை நம்பியே அவர்களில் வாழ்க்கை வருமானம் இருக்கின்றது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்