Paristamil Navigation Paristamil advert login

ரோஹித் ஷர்மா ஒரு நல்ல தலைவர் - ஆகாஷ் தீப் புகழாரம்

ரோஹித் ஷர்மா ஒரு நல்ல தலைவர் - ஆகாஷ் தீப் புகழாரம்

16 தை 2025 வியாழன் 16:00 | பார்வைகள் : 5459


இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப், அணித்தலைவர் ரோஹித் ஷர்மா சிறந்த தலைவராக செயல்படுகிறார் என புகழ்ந்துள்ளார். 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் (Akash Deep) மொத்தம் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 28 வயதான ஆகாஷ் தீப் 7 டெஸ்ட்களில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இந்த நிலையில் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா குறித்து அவர் புகழ்ந்து பேசியுள்ளார். 

அவர் கூறுகையில், "ஒரு தலைவர் என்பவர் தன்னை முன்னிலைப்படுத்தாமல், தமது அணிக்கு என்ன தேவையோ அதைதான் முன்னிலைப் படுத்துவார். ரோஹித் பாய் எப்போதும் உத்வேகம் அளிப்பவர்.

என்னைப் போன்ற புதிய வீரர்கள் விளையாட நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுப்பவர். நீங்கள் நினைத்தது போல் நடக்காமல் போகும் சமயங்களில், ஒரு நல்ல தலைவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். ரோஹித் ஷர்மாதான் அந்த தலைவர்" என தெரிவித்துள்ளார்.   

வர்த்தக‌ விளம்பரங்கள்