Paristamil Navigation Paristamil advert login

இன்று உதயாமாகும் செவ்வாய் கிரகம். செவ்வாய் தோஷத்தை போக்குமா?

இன்று உதயாமாகும் செவ்வாய் கிரகம். செவ்வாய் தோஷத்தை போக்குமா?

16 தை 2025 வியாழன் 16:25 | பார்வைகள் : 705


ஓவ்வொரு 26 மாதங்களுக்கு ஒருமுறை சூரியன் அஸ்தமனமாகும் போது செவ்வாய் கிரகம் உதயமாகும், இந்த காட்சியை பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் இருந்து  எந்த கருவிகளும் இன்றி கண்களால் பார்க்க முடியும். இந்த நிகழ்வு இன்று வியாழக்கிழமை (16/01) நிகழ்கிறது.

ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செவ்வாய் கிரகம் தனது சுற்றுவட்டத்தில் பூமியை நெருங்கி வருகிறது அதாவது 96 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில். இதனால் செவ்வாய் கிரகத்தை வானில் மனிதன் பார்க்க முடியும். மிகப் பெரியதாகவும், மிகுந்த பிரகாசமாகவும் கிரகம் காட்சி அளிக்கும்.

இதனை தவறவிட்டால் அடுத்த உதயம் பிப்ரவரி 19, 2027 அன்று நடைபெறும். இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய தோற்றமாக செவ்வாய் கிரகம் காட்சி அளிக்க இருப்பது 2031, அதேபோல் இந்த ஆண்டு மார்ச் 14ஆம் திகதி முழு சந்திர கிரகணமும், மார்ச் 29ஆம் திகதி பகுதி சூரிய கிரகணமும் நிகழ இருக்கிறது.

இந்த நிகழ்வுகள் வானியலில் ஏற்படுகின்ற கிரகங்களின் சுற்றுவட்டத்தில் மாறி மாறி நிகழ்கின்ற நிகழ்வாகும் இதற்கும் செவ்வாய் தோஷத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை.

எழுத்துரு விளம்பரங்கள்