பிரதிப் ரங்கநாதனின் 'டிராகன்' ரசிகர்களுக்கு விருந்தா?
17 தை 2025 வெள்ளி 03:49 | பார்வைகள் : 296
ரவி மோகன் நடித்த ‘கோமாளி’ என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன்பின் 'லவ் டுடே’ என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிரதிப் ரங்கநாதன், தற்போது அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் "டிராகன்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"டிராகன்" திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், காயடு லோஹர் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் இந்த படத்தில் மிஷ்கின், கௌதம் மேனன், கே எஸ் ரவிக்குமார், ஜார்ஜ் மரியம், விஜே சித்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லியோன் ஜோன்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது பிப்ரவரி 14-ஆம் தேதி தினத்தில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, இது குறித்த போஸ்டரும் வெளியாகியுள்ளது.
"லவ் டுடே" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், பிரதிப் ரங்கநாதனின் அடுத்த படமாக "டிராகன்" ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.