Paristamil Navigation Paristamil advert login

ஆட்டு மூளை வறுவல்

ஆட்டு மூளை வறுவல்

17 தை 2025 வெள்ளி 03:59 | பார்வைகள் : 142


மூளையில் பொரியல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் நல்ல காரசாரமான வறுவலை செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்

ஆட்டு மூளை - 1

சின்ன வெங்காயம் - 5

பூண்டு - 3 பல்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

கொத்தமல்லி - சிறிது

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - சுவைக்கேற்ப

அரைப்பதற்கு...

மல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்

கசகசா - 1 டீஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

advertisement

சீரகம் - 1/2 டீஸ்பூன்

வரமிளகாய் - 1 தாளிப்பதற்கு.

எண்ணெய் - 2 டீஸ்பூன்

பட்டை - 1 துண்டு

கிராம்பு - 1

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் ஆட்டு மூளையை நன்கு நீரில் கழுவிக் கொள்ளவும். பின் மூளையில் உள்ள சிவப்பு நரம்புகளை நீக்கிவிட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, மீண்டும் நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்பு மூளையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இப்போது மிக்ஸர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள மூளையை போட்டு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி விட வேண்டும். பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 1/4 கப் நீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

மசாலாவில் பச்சை வாசனை போனதும்,  நீர் வற்றியதும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான மூளை வறுவல் ரெடி.

குறிப்பு: ஆட்டு மூளை வேகமாக வெந்துவிடும். எனவே நீண்ட நேரம் வேக வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.ஆட்டு மூளை மிகவும் மென்மையாக இருப்பதால், சமைக்கும் போது பார்த்து கையாளுங்கள்.

காரமாக வேண்டுமானால், 2 வரமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.தேவைப்பட்டால் இதனுடன் 2 முட்டையை உடைத்து ஊற்றியும் செய்யலாம். இதனால் வறுவல் பார்ப்பதற்கு அதிகமாகவும் சாப்பிட சுவை மிகுதியாகவும் இருக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்