Paristamil Navigation Paristamil advert login

பனிப்பொழிவு, வெள்ளம்.. : 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

பனிப்பொழிவு, வெள்ளம்.. : 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

17 தை 2025 வெள்ளி 08:00 | பார்வைகள் : 1121


வெள்ளம், கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு (neige-verglas) காரணமாக இன்று ஜனவரி 17, வெள்ளிக்கிழமை 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வானிலை அவதானிப்பு மையமான Météo France தெரிவிக்கையில், கடந்த நாட்களைப் போல இன்றும் கடும் குளிர் தொடர்கிறது எனவும், Côte-d'Or, Doubs, Jura, Haut-Rhin, Haute-Saône, Saône-et-Loire மற்றும் Territoire de Belfort ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.

அதிகபட்சமாக -8°C வரை குளிர் நிலவும் எனவும், மக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அதேவேளை, மழை மற்றும் வெள்ளம் காரணமாக 15 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aisne, Ardennes, Aube, Charente, Charente-Maritime, Eure, Loire-Atlantique , Maine-et-Loire, Marne, Meuse, Oise as well as Seine-Maritime, Seine-et-Marne, Somme மற்றும் Vendée ஆகிய 15 மாவட்டங்களுக்கு வெள்ள அனர்த்தம் காரணமாக ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் Météo France அறிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்