Paristamil Navigation Paristamil advert login

ஏலத்துக்கு விடப்பட்ட Grande Arche!!

ஏலத்துக்கு விடப்பட்ட Grande Arche!!

8 சித்திரை 2018 ஞாயிறு 17:30 | பார்வைகள் : 18143


ஜனாதிபதி François Mitterrand, 1982 ஆம் ஆண்டு ஒரு புதிய கட்டிடம் கட்டுவதற்குரிய வடிவமைப்பை பொது ஏலத்தில் விட்டார். பல நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களது புதிய வடிவமைப்புக்களை காண்பித்து போட்டியில் கலந்துகொண்டனர். 
 
புதிய 'மில்லேனியம்' ஆண்டு வடிவமைப்பு வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த போட்டிக்கு உலகம் முழுவதும் எங்கிருந்தும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிரித்தானியா, ஜெர்மன், சுவிட்சர்லாந்து என பல 'ஆர்கிடெக்சர்' நிறுவனங்கள் போட்டியில் கலந்துகொண்டன.
 
டென்மார்க்கில் பல்வேறு நவீன தேவாலங்களை வடிவமைத்து வரும் Johan Otto von Spreckelsen என்பவர், இந்த ஏலத்துக்காக சதுர வடிவிலான ஒரு கட்டிடத்தை வடிவமைத்து போட்டியில் கலந்துகொண்டார். 
 
தாயக்கட்டை போன்று இந்த இந்த வடிவமைப்பு வெகுவாக அனைவரையும் கவர்ந்தது. ஜனாதிபதி Mitterrandக்கும் அந்த 'டிசைன்' பிடித்திருந்தது. 
 
ஜனாதிபதி Mitterrand, இந்த கட்டிடத்தை பார்க்கையில் 'தூய்மையாகவும் வலிமையாகவும் தோன்றுகிறது!' என குறிப்பிட்டார். 
 
பின்னர், அந்த கட்டிடத்தின் வடிவமைப்பு வெற்றி பெற, 1985 ஆம் ஆண்டு கட்டிடபணிகள் ஆரம்பித்தன. துரித கதியில் நடைபெற்ற கட்டிடபணிகள், 1989 ஆம் ஆண்டு முடிவடைந்தது. 
 
ஜூலை 14, 1989 ஆம் ஆண்டு ஜனாதிபதி Mitterrand இக்கட்டிடத்தை திறந்து வைத்தார். என்ன கட்டிடம் எங்க இருக்கா..?? 
 
 La Défense இன் முதலாவது கட்டிடமே இது தானே..? La Grande Arche de la Défense என்பது அதன் முழு பெயர்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்