இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை
17 தை 2025 வெள்ளி 06:38 | பார்வைகள் : 289
இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
பரிசுகள், பணம் மற்றும் தள்ளுபடிகள் வழங்குவதாகக் கூறும் மோசடி செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில், இதுபோன்ற செய்திகளை வாட்ஸ்அப் மூலமாகவும் பெறலாம்.
இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றத்தின் மூத்த தகவல் பொறியாளர் சாருகா தமுனுபொல, நீங்கள் பெறும் எந்தவொரு செய்தியையும் எந்த வகையிலும் உறுதிப்படுத்தாமல் பணத்தை மாற்றவோ அல்லது தனிப்பட்ட தகவல்களை வழங்கவோ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.