Paristamil Navigation Paristamil advert login

லெபனான் சென்றடைந்த ஜனாதிபதி மக்ரோன்!

லெபனான் சென்றடைந்த ஜனாதிபதி மக்ரோன்!

17 தை 2025 வெள்ளி 07:20 | பார்வைகள் : 608


லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு இன்று ஜனவரி 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சென்றடைந்துள்ளார்.

அங்கு வைத்து லெபனானின் புதிய ஜனாதிபதி Joseph Aoun மற்றும் பிரதமர் Nawaf Salam இனைச் சந்திக்க உள்ளார். 12 மணிநேர சுற்றுப்பயணமாக தனது தனி விமானத்தில் இன்று காலை லெபனானை ஜனாதிபதி மக்ரோன் சென்றடைந்துள்ளார்.

முன்னதாக, நேற்று வியாழக்கிழமை ஐ.நாவின் பொதுச் செயலாளர் Antonio Guterres லெபனானைச் சென்றடைந்திருந்ததார். அங்கு வைத்து அவர்களுக்கிடையே சந்திப்பு இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டிருந்தது. அதை அடுத்து, அங்கு புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதலாவது வெளிநாட்டு தலைவராக இம்மானுவல் மக்ரோன் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

(புகைப்படத்தில் லெபனானின் புதிய ஜனாதிபதி Joseph Aoun)

எழுத்துரு விளம்பரங்கள்