கருக்கலைப்பு செய்யும் பெண்கள் 'கொலைகாரிகள்' 50 ஆண்டுகள் நிறைவு.
17 தை 2025 வெள்ளி 09:20 | பார்வைகள் : 1376
ஜனவரி 17, 1975 வரை பிரான்சில் மருத்துவ தேவைகள், ஆலோசனைகள் இன்றி ஒரு பெண் தானாகவே விரும்பி கருக்கலைப்பு செய்ய முடியாத நிலையே இருந்து வந்தது. இதனால் அன்று தாமாக கருக்கலைப்பு செய்யும், செய்ய விரும்பும் பெண்களை சமூகம் 'கொலைகாரறிகள்' என்றே அழைத்து வந்தது. 17/01/1975 அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டம் பெண்கள் தாமாகவே முன்வந்து கருக்கலைப்பு செய்ய அனுமதித்தது. ஆனாலும் கருக்கலைப்புச் செய்யச் செல்லும் இடங்களில் தாங்கள் பல அவமானங்களை சந்திப்பதாகவும் பல அருவருப்பான கேள்விகள் தங்கள் முன் வைக்கப்படுவதாகவும் பெண்கள் 50 ஆண்டுகள் தாண்டி குற்றம் சாட்டி வருகின்றனர்.
இருப்பினும் "அரசியலமைப்புச் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள கருக்கலைப்பு உரிமைக்கும், இந்த வகையான அவமானத்தின் உண்மைக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது" என பெண்கள் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனாலும் கருக்கலைப்பு செய்யும் வீதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது உதரணமாக 2023 இல் 243,623 கருக்கலைப்புகள் மேற்கொள்ளப்பட்டன இது 2022 ஆண்டோடு ஒப்பிடுகையில் 8,600 அதிகமாக இருக்கிறது. பிரான்சில் இறப்பு வீதத்தில் வீழ்ச்சி உள்ளது போல் பிறப்பு வீதத்தில் பெரும் வீழ்ச்சி காணப்படுகிறது. இன்று 21ம் நூற்றாண்டில் இன்னமும் கருத்தரிப்பதும் அதனை கலைப்பதும் அதிகரித்து வருவது வேடிக்கையானது என சமூக ஆவல்கள் தெரிவித்து கருத்து வருகின்றனர்.