இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிகள்: பிசிசிஐ அதிரடி
17 தை 2025 வெள்ளி 10:05 | பார்வைகள் : 129
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை பிசிசிஐ நிர்ணயித்துள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் ஏற்பட்ட படுதோல்விகள், பிசிசிஐ-யை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதன் விளைவாக, அணியின் செயல்பாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தொடர் தோல்விகள், வீரர்களின் ஒழுக்க கேள்விகள், அணியில் நிலவும் உள் முரண்பாடுகள் போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குடும்பத்தினருடன் பயணம்: வெளிநாட்டுப் பயணங்களின் போது, வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட காலத்திற்கு மேல்(2 வாரங்கள்) குடும்பத்தினர் அணியுடன் தங்கியிருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஒருங்கிணைந்த பயணம்: அனைத்து வீரர்களும் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்யும் பேருந்து மற்றும் விமானங்களில் மட்டுமே பயணிக்க வேண்டும். தனிப்பட்ட பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
கட்டாய பயிற்சி: பயிற்சி நேரங்களில் அனைத்து வீரர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.
கடுமையான உடல் தகுதி: அனைத்து வீரர்களும் பிசிசிஐ நிர்ணயித்த உடற்தகுதி தரநிலைகளை பின்பற்ற வேண்டும்.
சம்பளக் குறைப்பு: தொடரில் சிறப்பாக செயல்படாத வீரர்களின் சம்பளத்தில் குறைப்பு செய்யப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.