தோல்வியில் முடிந்த நம்பிக்கை இல்லா பிரேரணை!!
17 தை 2025 வெள்ளி 11:03 | பார்வைகள் : 1413
பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம் மீது கொண்டுவந்த நம்பிக்கை இல்லா பிரேரணை நேற்று வியாழக்கிழமை மாலை வாக்கெடுப்புக்கு கொண்டுவரப்பட்டது. எதிர்பார்த்த வாக்குகள் பதிவாகாத நிலையில், பிரேரணை தோல்வியில் முடிந்தது.
நம்பிக்கை இல்லா பிரேரணையை நிறைவேற்றுவதற்கு தேவையான 288 வாக்குகளில், 131 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது.
Nouveau Front populaire (NFP) கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு வாக்களித்த நிலையில், சோசலிச கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் ஆதரவு வாக்களித்துள்ளனர்.
அதை அடுத்து பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம் மீது கொண்டுவரப்பட்ட முதலாவது நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வியில் முடிந்தது.