Paristamil Navigation Paristamil advert login

ஓவியர் Vincent van Gogh வசித்த பிரெஞ்சு கிராமம்!!

ஓவியர் Vincent van Gogh வசித்த பிரெஞ்சு கிராமம்!!

7 சித்திரை 2018 சனி 12:30 | பார்வைகள் : 18419


ஓவியர் Vincent van Gogh, தன் வாழ்நாளில் நான்கு நாடுகளில் உள்ள 38 இடங்களில் வசித்ததாக குறிப்பிட்டிருந்தார். Dutch குடியுரிமை கொண்ட ஓவியரான இவர், தன் வாழ்நாளின் இறுதியை பிரெஞ்சு கிராமம் ஒன்றில் கழித்தார். 
 
van Gogh தற்கொலை செய்துகொண்டார் என்றல்லவா கேள்விப்பட்டிருக்கிறோம்.. என நீங்கள் யோசித்தால்... யெஸ்!! அவர் தனது 37 வது வயதில் தற்கொலை செய்துகொண்டார். 
 
வடக்கு பரிசில் இருந்து 20 மைல்கள் பயணம் மேற்கொண்டால், Auvers-sur-Oise செல்லலாம்... அங்கு Oise வற்றா நதியுடன் இணைந்த ஒரு குக்கிராமம். Auvers-sur-Oise என்றவுடன் நினைவுக்கு வருவது கோதுமை தானே... கோதுமை வயல்கள் கொண்ட இந்த கிராமம் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக van Gogh தனது இளைய சகோதரன் Theoவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 
 
மே மாதம் 1890 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்த கிராமத்தை வந்தடைந்தார் van Gogh. 
 
சனத்தொகை குறைந்த... மிக அமைதியான இந்த கிராமம்.... கோதுமை வயல்களுக்குள்ளே தெரியும் தேவாலயம்.. என இருந்த இந்த கிராமத்தில் அடுத்து வந்த இரண்டு மாதங்கள் வசித்தார். Musée d’Orsay இல் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அந்த தேவாலய ஓவியம், இங்கு தான் உள்ளது. 
 
இங்கு வசித்த இரண்டு மாதங்களில் 70 ஓவியங்கள் வரைந்துள்ளார். இங்கிருந்து பல கடிதங்களையும் எழுதி தன் சகோதரன், தந்தை என பலருக்கு அனுப்பியுள்ளார். 
 
இப்படியாக இருந்தவர், தனது 37 வது வயதில் ஜூலை 29, 1890 இல் தன்னைத்தானே துபாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். Auvers-sur-Oise இல் உள்ள மயானத்தில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்