14 ஆம் இலக்க மெற்றோவில் புதிய நிலையம்.. நாளை திறப்பு!!
17 தை 2025 வெள்ளி 12:03 | பார்வைகள் : 14041
14 ஆம் இலக்க தனியங்கி மெற்றோவில், நாளை ஜனவரி 18 ஆம் திகதி முதல் மேலும் ஒரு புதிய நிலையம் இணைகிறது.
பரிசின் தெற்கு புறநகரான Villejuif நகரில் ”Gustave-Roussy” எனும் மெற்றோ நிலையம் திறக்கப்பட உள்ளது. அங்குள்ள பிரபலமான புற்றுநோய் மருத்துவமனையான Gustave-Roussy இற்கு அருகே இந்த நிலையம் திறக்கப்படுவதால், மருத்துவமனை ஊழியர்களுக்கும், நோயாளிகளுக்கும் பெரும் உதவியாக இது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
நாளை, ஜனவரி 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை குறித்த நிலையம் திறந்துவைக்கப்பட உள்ளது. இல் து பிரான்சின் பொது போக்குவரத்து துறை தலைவர் திறப்பு விழாவில் பங்கேற்பதாக அறிய முடிகிறது.


























Bons Plans
Annuaire
Scan