'மாமன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

17 தை 2025 வெள்ளி 14:24 | பார்வைகள் : 3484
'விலங்கு' வெப் தொடர் மூலம் பிரபலமான இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில். சூரி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் 'மாமன்'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சூரிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் ராஜ் கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர், பால சரவணன், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் 6 வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையே உள்ள உறவை கூறும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது. உணர்வு பூர்வமாகவும், அணைத்து தரப்பு மக்களும் குடும்பத்தோடு பார்த்து மகிழும் ஜனரஞ்சகமான கதைக்களத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. தன்னுடைய தங்கை மகனை மடியில் வைத்திருக்கும், சூரிக்கு காது குத்துவது போல் இந்த போஸ்டர் உள்ளது. அவரை சுற்றி, குடும்பத்தினர் நின்றுகொண்டிருக்கின்றனர்.
கடைசியாக சூரி நடிப்பில் வெளியான விடுதலை 2 படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் இவர் தனி ஹீரோவாக நடித்த கருடன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. சூரி நடிக்கும் மாமன் படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கருடன் பட வெற்றிக்கு பின்னர் மீண்டும் தயாரிப்பாளர், கே.குமாருடன் இணைத்துள்ளதால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3