Paristamil Navigation Paristamil advert login

செல்வந்தரின் அருங்காட்சியகம்!!

செல்வந்தரின் அருங்காட்சியகம்!!

6 சித்திரை 2018 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18359


நேற்றைய தினம் Édouard André எனும் ஒரு பிரெஞ்சு செல்வந்தர் குறித்த தகவல்களை வழங்கியிருந்தோம் இல்லையா..? அதன் முடிவில்.. அவரின் சேகரிப்புக்களை சேர்த்து அருங்காட்கியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தோமே... 
 
எட்டாம் வட்டாரத்தில் உள்ள Musée Jacquemart-André குறித்து தான் சொல்கிறோம்...
 
பெரும் செல்வந்தரான இவர், தன்னிடம் கொட்டிக்கிடந்த பணத்தினை ஓவியங்களாக வாங்கி செலவிட்டார். சிலைகள், சிற்பங்கள் என பல கலைப்பொருட்களை வாங்கி சேகரித்து வைத்திருந்தார். 
 
இவர் வசித்த மாளிகை 1869 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பின்னர் Nelie Jacquemart-André ஐ திருமணம் செய்துகொண்டதன் பிற்பாடு, இத்தாலிக்கு ஒவ்வொரு வருடமும் இருவரும் பயணப்படுவார்கள். அங்குள்ள பல ஓவியங்களை இருவரும் வாங்கிக்கொண்டு வருவார்கள். 
 
இப்படியாக சேர்க்கபட்ட ஓவியங்கள், இங்கு ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தாலி ஓவியங்களுக்கென தனி பகுதியே இங்குண்டு. 
 
தனது மாளிக்கைக்குள் ஓவியங்களை அடுக்கி அழகு பார்த்த Édouard André, அவரின் இறப்புக்கு பின்னர் பொதுமக்களுக்காக  1913 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 
 
இத்தாலி நாட்டின் 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டு ஓவியங்களை தரிசிக்க, உங்களுக்கு பரிசி இந்த அருங்காட்சியகத்தை விட்டால் வேறு வழியில்லை. 
 
முகவரி : 158 Boulevard Haussmann, 75008 Paris. அழைக்க : +3 31 45 62 11 59. காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை திறந்திருக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்