பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானிற்கு 14 வருட சிறை தண்டனை விதிப்பு
17 தை 2025 வெள்ளி 16:40 | பார்வைகள் : 565
பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானிற்கு பாக்கிஸ்தான் நீதிமன்றம் 14 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
காணி ஊழல் வழக்கிலேயே நீதிமன்றம் இம்ரான்கானிற்கு 14 வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
ராவல்பிண்டியில் உள்ள சிறைச்சாலையில் இயங்கும் ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் இந்த தண்டனையை அறிவித்துள்ளது. இம்ரான்கான் இந்த சிறையிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
72 வயது இம்ரான்கான் பிரதமராக பதவிவகித்த வேளை அரசாங்கத்திடமிருந்து சட்டவிரோத சலுகைகளை பெற்றுக்கொள்வதற்காக ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள ஒருவர் இம்ரான்கானிற்கும் அவரது மனைவிக்கும் காணியொன்றை வழங்கினார் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டமை குறிபிடத்தக்கது.
எனினும் இம்ரான்கானும் அவரது மனைவி புஷ்ரா பீபியும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தனர்.
அரசாங்கத்திற்கும் இம்ரான்கானின் கட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதால் இந்த தண்டனை குறித்த அறிவிப்பு மூன்று முறை தாமதமாகியது.