"குற்றச்செயல்களுக்கு துணைபோக டெலிகிராம் உருவாக்கவில்லை!' பரிஸ் நீதிமன்றத்தில் Pavel Durov தெரிவிப்பு!!
17 தை 2025 வெள்ளி 18:01 | பார்வைகள் : 841
டெலிகிராம் (Telegram) செயலியின் உரிமையாளர் Pavel Durov, கடந்த ஓகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். பிரான்ஸ்-இரஷ்ய இரட்டைக் குடியுரிமை கொண்ட அவர் le Bourget விமான நிலையத்தில் வந்திறங்கிய போது அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் அவர் 'வீட்டு தடுப்பு காவலில்' வைக்கப்பட்டிருந்ததாகவும், அண்மையில் நீதிமன்ற விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு 10 மணிநேரம் வரை விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக Franceinfo ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விசாரணைகளில் அவர் மீது சுமத்தப்பட்ட 20 வரையான குற்றச்சாட்டுக்களுக்கு அவர் விளக்கம் அளித்ததாகவும், 'டெலிகிராம் செயலியானது பயங்கரவாதத்துக்கோ, குற்றச்செயல்களுக்கோ துணை போக தயாரிக்கப்படவில்லை!' என அவர் விசாரணைகளில் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெலிகிராம் செயலியில் உருவாக்கப்படும் chanel வசதியானது போதைப்பொருள் விற்பனைக்கும், ஆயுத விற்பனைக்கும், End to End encryption வசதி மூலம் பயங்கரவாத தகவல்கள் பரிமாறவும் பயன்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.