ஒரு செல்வந்தரின் கதை இது!!
5 சித்திரை 2018 வியாழன் 13:30 | பார்வைகள் : 19253
பிரான்சில் முன்னொரு காலத்தில் ஒரு செல்வந்தர் வாழ்ந்தார். மிகவும் வருமானம் கொழிக்கும் வேலைகள் பலவற்றை அவர் பார்த்து வந்தார். அவருக்கென அழகிய மாட மாளிகையும், கூப்பிடும் போதெல்லாம் ஓடிவரும் பணி ஆட்களும் அவர் எப்போதும் பெரும் செல்வந்த வாழ்க்கை வாழ்ந்தார்.
1833 ஆம் ஆண்டு பிறந்த அவரின் பெயர் Édouard André. இவர் பிறந்த இரண்டாவது வயதில் தனது தாயை இழந்தார்.
இவரின் தந்தையார் காலத்தில் இருந்தே செல்வச்செழிப்புடன் இருந்ததால், அப்போதைய பிரெஞ்சு மன்னர் மூன்றாம் நெப்போலியனுடன் இணைந்து பல சமூக சேவைகளில் ஈடுபடுத்திக்கொண்டார்.
பிரான்சின் நவீன வளர்ச்சிக்கு பாரிய 'நிதி' உதவி வழங்கினார். பின்னர் இவர் வளர்ந்ததும் சொந்தமாக வங்கி ஒன்றை ஆரம்பித்தார். அது மேலும் பல 'தங்கக்காசுகளை' குட்டி போட்டது.
தேர்தலில் எல்லாம் போட்டியிட்டு, வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர் கூட ஆனார்.. இரண்டாவது எம்பையார் தோல்விக்கு பின்னர் தேசிய இராணுவத்தில் 'திடும்' என தன்னை சேர்த்துக்கொண்டார்.
இப்படியாக இருக்கும் போது, ஒருநாள் ஓவியக்கண்காட்சியில் ஓவியங்களை ஏலம் எடுக்கச் சென்றிருந்தார். ஆனால் அங்கு அவர் ஏலத்தில் எடுத்தது என்னவோ அவரின் எதிர்கால மனைவியை. பிரெஞ்சு பேரழகியான Nélie Jacquemart ஐ ஒரு நாள் திருமணம் செய்துகொண்டார். அவர் ஒரு அசாத்தியமான ஓவியரும் கூட.
இவரின் மாளிகை ஒரு அற்புதமான களஞ்சியம். ஓவியங்கள் மேல் உள்ள ஈர்ப்பால், ஒரு கட்டத்தில் இவரிடம் உள்ள பணத்தை எல்லாம் கொட்டி, புகழ்பெற்ற ஓவியங்களை எல்லாம் வாங்கிக்கொண்டார்.
பின்னர் அதுவே பழக்கமாகி, பிடித்துப்போய்... பல 'பழைய' பொருட்களை சேகரிக்கும் பழக்கத்தை தொடரலானார்.
அப்புறம், 1894 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் ஒருநாள் உயிரிழந்தார். ஆனால் நாம் சொல்லவந்த கதை, அதுவல்ல... இவர் சேகரித்து வைத்த பொருகள் எல்லாம் 'அருங்காட்கியகமானது'...
எங்கே..?? நாளை சொல்கிறோம்..!!