'Brevet' கல்லூரிச் சான்றிதழ் கட்டாயம் இல்லை 'Lycée' உயர் கல்லிக்குள் நுழைய.

18 தை 2025 சனி 08:18 | பார்வைகள் : 11785
முன்னாள் பிரதமரும் இன்றைய கல்வி அமைச்சருமான Elisabeth Borne நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில், முன்னாள் கல்வி அமைச்சர் கட்டாயமாக கொண்டு வர இருந்த 'Collège' எனும் கல்லூரியில் இருந்து மாணவன் 'Lycée' எனும் உயர்கல்விக்கு செல்ல 'Brevet' பரீட்சையில் சித்தியடைந்த சான்றிதழ் கட்டாயம் தேவை என்னும் திட்டத்தை நிராகரித்து "Brevet' கல்லூரிச் சான்றிதழ் கட்டாயம் இல்லை 'Lycée' உயர் கல்லிக்குள் நுழைய" என அறிவித்துள்ளார்.
ஜூன் 2027 அமர்வில் இருந்து இரண்டாம் ஆண்டில் நுழைவதற்கு சான்றிதழைக் கட்டாயமாக்கிய முன்னாள் கல்வி அமைச்சின் முடிவை "இது சமூக வரிசைப்படுத்தல், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும்" என ஆசிரியர் சங்கங்களும், பெற்றோர் சங்கங்களும் கடுமையாக விமர்சித்தும், எதிர்த்தும் வந்த நிலையில் François Bayrou தலைமையிலான அரசின் புதிய கல்வி அமைச்சரும் முன்னாள் பிரதமருமான Elisabeth Borne அவர்கள் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1