Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் குழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய தாய்?

இலங்கையில் குழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய தாய்?

18 தை 2025 சனி 09:49 | பார்வைகள் : 260


ஹபரணை பொலிஸ் பிரிவின் பலுகஸ்வெவ பகுதியில் 10 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவத்தில் தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த  வீட்டொன்றில் 16ஆம் திகதி இரவு குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக ஹபரண பொலிஸ் நிலையத்திற்கு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புலனகம, பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இது ஒரு கொலை என்பது தெரியவந்துள்ளது. இந்த செயல் தொடர்பாக உயிரிழந்த குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ தினத்தன்று குழந்தையின் தந்தை வீட்டில் இல்லை எனவும், குழந்தையை வீட்டிற்கு பின்னால் உள்ள தண்ணீர் குழிக்குள் வீசி பின்னர் குழந்தையை மீட்டு, வீட்டின் கட்டிலில் வைத்ததாக கைது செய்யப்பட்ட தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தாய் பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

நீதவான் விசாரணையைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.