அழியும் தமிழர்

18 தை 2025 சனி 12:09 | பார்வைகள் : 3112
நேரிசை வெண்பா
ஒருபெருச் சாளியே ஓடத்தாங் காயில்
பெருச்சாளி ஆட்சி யிலேபார் ,-- இருந்தும்
பணிசெய்யா மூளையாக்கி மக்கள் கெடவும்
அணிகள் கொழுத்தது பாரு
வீட்டில் ஒரு பெருச்சாளி இருந்து கொடுக்கும் தொல்லையே தாங்க முடியாது..
நாடு முழுக்க கட்சி கழகம், சங்கமென்று பலதும் உண்டாகி வளர. உலகத் தீயசக்திகள்
அதற்கு பணவுதவியை மறைமுகமாக அனுப்புகிறது. அயல் நாட்டு மதத்தினரும்
அயல் நாடுகளும் போட்டி போட்டு கட்சிகளுக்கும் கழகங்களுககும் பணம் அனுப்ப
தலைகள் நாட்டுப் பற்று நீங்கி நாட்டையே அழித்து வருகிறார்கள். இது தமிழ்நாட்டில்
மாட்டு மின்றி பாரதம் முழுக்க நடக்கிறது. நமது நாட்டு மக்கள் அதனால்தான்
நாட்டைப் பற்றி நினைக்காது கூத்து கும்மாளமாய் அலைகிறார்கள். தெற்கே இருப்பவனை வடக்கில் சைனா பாக்கிஸ்தான் சுட்டால் நமக்கென்ன என்று நினைக்க வைத்தது யாராம்.? கழமும் கட்சிகளும் தான். !! வெளிநாட்டு பகைகள் இலங்கையில் இராணுவத் தளங்கள் அமைத்தால் தமிழ்நாட்டுக்கு ஆபத்து என்பதை மக்கள் உணராது மக்கள் சினிமா கட்சி வகுப்பு வாதம் பேசுவார் பின்னே போவது ஏனோ ? எந்த கழகமும் உலக நாடுகள் பற்றி அவர்களால் ஏற்படும் அபாயங்களை மக்களுக்கு சொல்லி விழிப்புணர்வு செய்கிறாரா? கிடையாது . காரணம் அவருக்கே அந்த விஷய ஞானம் கிடையாது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1