Paristamil Navigation Paristamil advert login

பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவரா ?

பிக் பாஸ் டைட்டில் வின்னர்  இவரா ?

18 தை 2025 சனி 12:26 | பார்வைகள் : 184


விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்குவார் என்கிற சந்தேகமும், கமல்ஹாசனுக்கு ஈடாக இந்த தொகுத்து வழங்குவாரா என்கிற எதிர்பார்ப்பும் நிலவியது. ஆனால் முதல் நாளே மிகவும் அருமையாக பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தன்னுடைய பாணியில் தொகுத்து வழங்கி ,ரசிகர்கள் மனதை கவர்ந்தார். 100 நாட்களுக்கான ஒட்டுமொத்த நம்பிக்கையையும் முதல் நாளிலேயே ரசிகர்களுக்கு கொடுத்த விஜய் சேதுபதி, இப்போது வெற்றிகரமாக, பைனலுக்கு அழைத்து வந்துள்ளார்.

ஒவ்வொரு வாரமும் மக்கள் தரப்பில், இவர் கேட்ட கேள்விகள் பாராட்டுகளை பெற்றென. அதே போல் இவர் தொகுத்து வழங்கியதில் துளியும் அரசியல் வாடை இல்லாமல் இருந்தது மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் சிறந்த தொகுப்பாளராக தன்னுடைய அடையாளத்தை பதிவு செய்துள்ள விஜய் சேதுபதி, இனி வரும் சீசன்களிலும் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி நாளையோடு முடிவுக்கு வர உள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதி நாள் ஷூட்டிங் தற்போது EVP ஃபிலிம் சிட்டியில் நடந்து வரும் நிலையில்,  டைட்டில் வின்னர் யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டிய போது, மொத்தம் ஆறு போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருந்தனர். இவர்களில் பண பெட்டி டாஸ்கில் ஜாக்குலின் எதிர்பாராத விதமாக இரண்டு வினாடிகள் தாமதமாக வந்ததால், பிக்பாஸ் அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றினார். கண்ணீருடன் நின்ற ஜாக்குலினுக்கு கருணை காட்டும் விதமாக, அனைவரும் அவர்களுக்கு கொடுத்த டம்மி ட்ராஃபியை உடைக்க வேண்டும் என பிக் பாஸ் கண்டிப்புடன் கூறினாலும், ஜாக்குலினுக்கு மட்டும் நீங்கள் உங்களுடைய டிராபியை வீட்டுக்கு எடுத்து செல்லலாம் என்று அறிவித்தார்.

ஜாக்லின் வெளியேறியதால் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் முத்து குமரன், பவித்ரா, விஷால், ரயான் மற்றும் சௌந்தர்யா ஆகிய ஐந்து பேர் உள்ளனர். ஏற்கனவே ரயான் டிக்கெட் டூ பினாலே வென்றதன் மூலம் நேரடியாக பைனலுக்குள் நுழைந்தார். ஆனால் இவர் பிக்பாஸ் டைட்டிலை வெல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

நேற்று வெளியான வோட்டிங் அடிப்படையில், முத்துக்குமரன் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தை சௌந்தர்யாவும், மூன்றாவது இடத்தை விஷாலும், நான்காவதாக ரயானும், ஐந்தாவது இடத்தில் பவித்ராவும் இருந்தனர்.

அதன்படி ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே, பிக்பாஸ் வீட்டின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், பிக்பாஸ் தமிழ் சீசன் 8 கோப்பையை கைப்பற்றியது மட்டும் இன்று, பரிசு தொகையும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முத்துக்குமரனின் ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்