2025 சாம்பியன் கிண்ணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு: அணிக்கு திரும்பும் அனுபவ வீரர்
18 தை 2025 சனி 15:13 | பார்வைகள் : 254
2025ஆம் ஆண்டு சாம்பியன் கிண்ணத் தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் துபாயில் சாம்பியன் கிண்ணத் தொடர் பிப்ரவரி மாதம் 19ஆம் திகதி தொடங்குகிறது.
இந்தத் தொடரில் விளையாட உள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் ஷர்மா இந்த அணிக்கு தலைமை தாங்குகிறார். துணைத் தலைவராக சுப்மன் கில் செயல்பட உள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஆகிய 4 ஆல்ரவுண்டர் இடம்பெற்றுள்ளனர்.
அணி விபரம்
ரோஹித் ஷர்மா
சுப்மன் கில்
விராட் கோஹ்லி
ஷ்ரேயாஸ் ஐயர்
கே.எல்.ராகுல்
ஹர்திக் பாண்ட்யா
அக்சர் படேல்
வாஷிங்டன் சுந்தர்
குல்தீப் யாதவ்
ஜஸ்பிரீத் பும்ரா
முகமது ஷமி
அர்ஷ்தீப் சிங்
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ரிஷாப் பண்ட்
ரவீந்திர ஜடேஜா