Paristamil Navigation Paristamil advert login

பிக்காசோ வசித்த பிரெஞ்சுத் தெரு!!

பிக்காசோ வசித்த பிரெஞ்சுத் தெரு!!

2 சித்திரை 2018 திங்கள் 12:30 | பார்வைகள் : 20791


ஸ்பெயின் நாட்டின் பெருமைமிகு அடையாளம் ஓவியர் பிக்காசோ. ஆனால் அவர் தான் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவராச்சே... அவருக்கும் பிரெஞ்சு புதினத்துக்கும் என்ன சம்மந்தம்..?? நாம் சம்மந்தப்படுத்திக்கொள்வோம்...
 
ஓவியர் பிக்காசோ, தன் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் பிரான்சில் வசித்தார். அவர் தனது 91 வயதில், பிரான்சின் தென்கிழக்கு மாவட்டமான Mougins நகரில் உயிரிழந்தார். ஆனால் அவர் ஒரு காலத்தில் பரிசில் உள்ள அழகிய தெரு ஒன்றில் வசித்தார். 
 
பரிசின் ஆறாம் வட்டாரத்தில் உள்ள 
51 Quai des Grands Augustins தெருவையும் 52 Rue Saint-André-des-Arts தெருவையும் இணைக்கு வீதியான Rue des Grands-Augustins வீதி தான் அது. இங்குதான் ஓவியர் பிக்காசோ வசித்தார். அதுவே இந்த வீதியின் மிகப்பெரும் அடையாளம். 
 
முன்னர் இந்த வீதி அமைதியாகவும் அழகாகவும் இருந்திருந்தாலும், தற்போது இங்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை... எத்தனையோ வீதிகள் போல்.. இதுவும் ஒரு வீதி. அவ்வளவே!!
 
ஆனால் ஓவியர் பிக்காசோ இங்குள்ள வீடு ஒன்றில் 1937 இல் இருந்து 1948 வரை 11 வருடங்கள் வாழ்ந்துள்ளார். 
 
அதன் பின்னர் பரிசில் ஜனத்தொகை எண்ணிக்கை அதிகரிக்கவும், கட்டிடங்கள் மேலெழும்பவும்... பரிசின் பரபரப்பு பிடிக்காமல்... வெவ்வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தார். 
 
நீங்கள் இந்த 213 மீட்டர்கள் நீளம் கொண்ட வீதியை கடக்க வாய்ப்புகள் மிக குறைவு என்றபோதும், எப்போதாவது கடக்க நேர்ந்தால்..  'ஓவியர் பிக்காசோவின் வீடு இந்த வீதியில் தான் உள்ளது!' என யாருக்கேனும் தகவல் தர பயன்படும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்