‘விடாமுயற்சி’ ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா?
18 தை 2025 சனி 16:07 | பார்வைகள் : 157
இயக்குனர் மகிழ் திருமேனி தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.'விடாமுயற்சி' ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா?.... மகிழ் திருமேனியின் பதில்!இந்த படம் அஜித்தின் 62 வது படமாகும். இந்த படத்தை லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார்.
ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். மங்காத்தா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அஜித், திரிஷா, அர்ஜுன் ஆகியோரின் கூட்டணி விடாமுயற்சி திரைப்படத்தில் இணைந்திருக்கிறது. எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தில் இருந்து டீசரும், ட்ரைலரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதற்கிடையில் விடாமுயற்சி திரைப்படமானது, பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று செய்திகள் வெளியாகி வந்தது. அதேசமயம் பிரேக் டவுன் படக்குழுவினர் விடாமுயற்சி படத்திற்கு தடையில்லா சான்று வழங்குவதற்காக கோடிக்கணக்கில் பணம் கேட்டதனால் தான் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் பொங்கல் ரேஸிலிருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வந்ததாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த படமானது பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில், இயக்குனர் மகிழ் திருமேனியிடம், விடாமுயற்சி படம் ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மகிழ் திருமேனி, “இதற்கு பதில் நான் இப்போது சொல்ல முடியாது. ஆனால் இது என்னுடைய கதை இல்லை. கணவன் – மனைவி இடையிலான பயணமும் அதில் நடக்கும் சம்பவங்கள் தான் விடாமுயற்சி படத்தின் கதை. இதில் ஆக்சன், திரில்லர் , சஸ்பென்ஸ் என அனைத்தும் அடங்கி இருக்கும். இது எதார்த்தத்திற்கு நெருக்கமாகவும் இருக்கும்” என்று கூறியுள்ளார்.