ஈரானில் இரு நீதிபதிகள் சுட்டுக் கொலை - அதிர்ச்சி சம்பவம்

18 தை 2025 சனி 17:37 | பார்வைகள் : 4144
ஈரான் தலைநகரில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் இரண்டு நீதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தெஹ்ரானில் உள்ள தீர்ப்பாய கட்டிடத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்டவர்தன்னைதானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு, பயங்கரவாதம், உளவு போன்றவற்றிற்கு எதிரான விசாரணைகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்த நீதிபதிகளே கொல்லப்பட்டுள்ளனர் என ஈரானின் நீதித்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கைதுப்பாக்கியுடன் நுழைந்த நபர் நீதிபதிகள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் என ஈரானின் நீதித்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.