பா-து-கலே : 68 அகதிகள் கடலில் இருந்து மீட்பு!!
18 தை 2025 சனி 18:51 | பார்வைகள் : 1158
பா-து-கலே கடற்பிராந்தியம் வழியாக பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்பட்ட 68 அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி 17, வெள்ளிக்கிழமை இரவு பல்வேறு படகுகளில் அகதிகள் அகதிகள் பயணித்துள்ளனர். அவர்களில் பலரை கடற்படையினர் மீட்டனர். காற்று நிரப்பப்பட்ட ஆபத்தான படகுகளில் அவர்கள் பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அகதிகளின் படற்பயணம் ஒவ்வொரு நாளும் இடம்பெறுவதாகவும், நாள் ஒன்றுக்கு சராசரியாக 600 பேர் வரை கடந்தவாரத்தில் பயணங்கள் மேற்கொண்டுள்ளதாக பா-து-கலே மாவட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.