”சோசலிச கட்சியினரிடம் ‘கடிவாளம்’ உள்ளது.. - முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து!
19 தை 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 545
பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம் மீது கொண்டுவந்த நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வியில் முடிந்ததை அடுத்து, சோசலிச கட்சியினரிடம் ‘கடிவாளம்’ உள்ளது என முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து கருத்து வெளியிட்டுள்ளார்.
Parti socialiste கட்சியினர் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதானால் ஆட்சிக்கவிழ்ப்பு தோல்வியில் முடிந்தது. அதை அடுத்து, 2027 ஆம் ஆண்டு வரை அரசாங்கனை வழிநடத்தும் அதிகாரம் சோசலிசலிஸ்டுகளிடம் இருப்பதாகவும், அவர்களே பாராளுமன்றத்தில் மைய துருவங்களாக இருப்பதாகவும், அவர்கள் இல்லாமலோ, அவர்களுக்கு எதிராகவோ எதுவும் செய்ய முடியாதுள்ளது எனவும், ’முக்கிய முடிவுகளை அறிந்து’ ஆதரவும் எதிர்ப்பும் வழங்கவேண்டிய ‘கடிவாளத்தை’ அவர்கள் கொண்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ஓலோந்து தெரிவித்தார்.
La France Insoumise, Nouveau Front populaire (NFP) போன்ற கட்சிகள் ஆதரவு வாக்களித்த போதும், நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவாக 131 வாக்குகள் மாத்திரமே பதிவாகியிருந்தன. தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு 288 வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.