வரிப்பணத்தை வீணடிக்கும் ‘ஆட்சிக்கவிழ்ப்பு’ - €30 பில்லியனை ஏப்பம் விட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம்!
19 தை 2025 ஞாயிறு 11:12 | பார்வைகள் : 1141
நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவந்து, ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்று புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே. இந்த ஆட்சிக்கவிழ்ப்பு நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆட்சிக்கவிழ்ப்பினால் மொத்தமாக 12 பில்லியன் யூரோக்கள் செலவு ஏற்பட்டதாகவும், குறிப்பாக வரவுசெலவு திட்டம் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்படாததால், இந்த இழப்பு தொகை 30 பில்லியன் யூரோக்களை நெருங்கும் எனவும், தொழிலாளர் அமைச்சரும், சுகாதார மற்றும் சமூக அமைச்சருமான Catherine Vautrin தெரிவித்துள்ளார்.
இந்த தொகையானது பிரெஞ்சு பொருளாதாரத்தில் 0.3% வீதம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரித்தார்.
”நாங்கள் ஜனவரி மாதத்தில் இருக்கிறோம். ஆனால் எங்களிடம் வரவுசெலவு திட்டம், சமூக பாதுகாப்பு நிதிச்சட்டம் இல்லாமல் 30 பில்லியன் யூரோக்கள் பற்றாக்குறையின் விளிம்பில் உள்ளோம்!” என அவர் மேலும் குறிப்பிட்டார்.