ACTIVA E, QC1 ஆகிய 2 மின்சார ஸ்கூட்டர்களை வெளியிட்டது Honda
19 தை 2025 ஞாயிறு 12:03 | பார்வைகள் : 137
இந்தியாவில் நடைபெறும் Auto Expo 2025-ல் ACTIVA e, QC1 ஆகிய 2 மின்சார ஸ்கூட்டர்களை Honda வெளியிட்டுள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அதன் புதிய மின்சார ஸ்கூட்டர்களான ACTIVA e: மற்றும் QC1 electric ஆகியவற்றை Bharat Mobility Global Expo 2025-ல் அறிமுகப்படுத்தியுள்ளது.
ACTIVA e: ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.1.17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் QC1 electric ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.90,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் மின்சார இரு சக்கர வாகனங்கள் ஆகும்.
ரூ.1,000 டோக்கன் தொகை செலுத்தி அவற்றை முன்பதிவு செய்யலாம்.
ஹோண்டா நிறுவனம் இரண்டு EVகளையும் இந்தியாவில் நவம்பர் 2024-இல் அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு ஸ்கூட்டர்களின் விநியோகமும் 2025 பிப்ரவரி மாதம் தொடங்கும்.
இந்த இரண்டு EV ஸ்கூட்டர்களும் Olaவின் S1 சீரிஸுடன் போட்டியிடும்.