திறமை வாய்ந்த பணியாளர்களை ஈர்க்கும் வகையில் பிரித்தானியா திட்டம்
19 தை 2025 ஞாயிறு 13:02 | பார்வைகள் : 360
பிரித்தானியா நாடு திறமை வாய்ந்த பணியாளர்களை கவர்வதற்கு விசா விதிகளில் சில கடடுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து திறமையான பணியாளர்களை ஈர்க்க AI தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான விசா விதிகளை தளர்த்த பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, தொழில்நுட்ப மேம்பாட்டில் முன்னேறி, திறமையான வெளிநாட்டு செயற்கை நுண்ணறிவு (AI) தொழிலாளர்களை ஈர்க்க புதிய விசா திட்டங்களை கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது.
பிரித்தானியா தனது AI Opportunities Action Plan எனும் செயல்திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், AI துறையில் பிரித்தானியா உலகின் தலைசிறந்த நாடாக மாறும் முயற்சியில் பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகம் உள்ளனர். TeamLease Degree Apprenticeship நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் அல்லூரி ரெட்டி கூறுகையில், இந்திய AI தொழிலாளர்கள் உலக சராசரியை விட 2.8 மடங்கு மேம்பட்ட திறமைகளை கொண்டுள்ளார்கள்.
இதனால், data analytics, cloud computing, machine learning போன்ற துறைகளில் இந்தியா முன்னணி நாடாக உள்ளது.
பிரித்தானியா தனது வலியுறுத்தப்பட்ட கல்வி நிலையங்கள் மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து சிறந்த திறமைசாலிகளை ஈர்க்க அதன் குடிவரவு முறையை திருத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளது.
Action Plan-இன் recommendation 21 படி, விசா முறையில் உள்ள செலவு மற்றும் சிக்கல்களை சரிசெய்வதற்கான புதிய வழிமுறைகள் உருவாக்கப்படும். இது சிறு startup நிறுவனங்கள் மற்றும் சர்வதேச திறமைகள் தங்களுக்கு தேவையான முயற்சிகளை எளிதாக்கும்.
பிரித்தானியா இதற்கான முயற்சியில் தொழில்துறை செயல்திட்டத்தை பயன்படுத்தி, சிறந்த திறமைகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது.
- திறமையான AI நிபுணர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
- பிரித்தானியாவின் புதிய விசா திட்டங்கள் மூலம் இந்திய தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகமாகும்.
- சர்வதேச நிபுணர்களை கொண்டு பிரித்தானிய AI துறையில் முன்னணியாக மாறும்.