நைஜீரியாவில் எரிபொருள் கொள்கலன் வெடித்து சிதறி விபத்து - 70க்கும் அதிகமானவர்கள் பலி
 
                    19 தை 2025 ஞாயிறு 13:33 | பார்வைகள் : 5184
நைஜீரியாவில் எரிபொருள் கொள்கலன் வெடித்து சிதறிய விபத்தில் 70க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மத்திய நைஜீரியாவில் எரிபொருள் கொள்கலன் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அதிலிருந்து வெளியேறிய எரிபொருளை எடுப்பதற்காக பெருமளவு மக்கள் காத்திருந்தவேளை அது வெடித்துசிதறியுள்ளது.
60,000 லீட்டர் எரிபொருளுடன் பயணித்துக்கொண்டிருந்த வாகனம் தலைநகரை நோக்கிய முக்கிய பாதையில் விபத்துக்குள்ளானது.
அதிகாரியொருவர் அதிலிருந்து வெளியேறிய எரிபொருளை எடுப்பதற்காக பெருமளவானவர்கள் அதற்கருகில் சென்றபோது அது வெடித்துசிதறியதுஎன தெரிவித்துள்ளார்.
பலர் அடையாளம் காணமுடியாதளவிற்கு கருகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பெருமளவு மக்கள் காத்திருந்தவேளை எரிபொருள் கொள்கலன் வெடித்து சிதறியதால் மற்றுமொரு கொள்கலன் தீப்பிடித்தது என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் 60 உடல்களை மீட்டுள்ளோம் அனேகமானவர்கள் துப்புரவுதொழிலாளர்கள் என தெரிவித்துள்ளார்.
 
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.
        KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan