Paristamil Navigation Paristamil advert login

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் 2ம் இடம் பிடித்த போட்டியாளர் யார் ?

பிக் பாஸ்  8 நிகழ்ச்சியில் 2ம் இடம் பிடித்த போட்டியாளர் யார் ?

19 தை 2025 ஞாயிறு 14:18 | பார்வைகள் : 328


பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் 6ந் தேதி தொடங்கி, 105 நாட்களைக் கடந்து இன்றுடன் முடிவடைந்து உள்ளது. இந்நிகழ்ச்சியில் ரயான், செளந்தர்யா, முத்துக்குமரன், விஷால், பவித்ரா ஆகிய ஐந்து போட்டியாளர்கள் தான் பைனலுக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் இந்த சீசனில் விளையாடிய போட்டியாளர்கள் கடந்த இரண்டு வாரங்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று பொங்கலை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த சீசனில் கடைசி வரை பணப்பெட்டியை வைக்காமல் இழுத்தடித்த பிக் பாஸ், கடைசி வாரத்தில் அதற்காக டாஸ்க் வைத்து அதிர்ச்சி கொடுத்தார். அதில் பிக் பாஸ் கொடுக்கும் நேரத்திற்குள் வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பணப்பெட்டியை எடுத்து வருபவர்களும் அந்த பணம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை ஏற்று அந்த முதல் பெட்டியை முத்துக்குமரன் குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்து வந்து 50 ஆயிரத்தை வென்றார்.

இதையடுத்து இரண்டு லட்சத்துடன் கூடிய பணப்பெட்டியை ரயான் மற்றும் பவித்ரா எடுத்து வந்தனர். மூன்றாவதாக ஐந்து லட்சத்துக்கான பணப்பெட்டியை விஷால் வெற்றிகரமாக எடுத்து வந்தார். இறுதியாக 8 லட்சத்துக்கான பணப்பெட்டி வைக்கப்பட்டது. அந்த பெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்து வர முடியாததால் ஜாக்குலின் இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு மிட் வீக்கில் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் கடைசியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் ஜாக்குலின் தான்.

இதையடுத்து மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார். அந்த வகையில் முத்துக்குமரன் அதிக வாக்குகளை பெற்று இந்த சீசனின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் பிடித்த போட்டியாளர் யார் என்பது தான் குழப்பமாக இருந்தது. 

இன்று காலை வரை விஷால் தான் இரண்டாம் இடம் பிடித்தார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அவரை விட அதிக வாக்குகள் வாங்கிய செளந்தர்யாவுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது உறுதியாகி உள்ளது. விஷால் மூன்றாம் இடத்தையும், பவித்ரா மற்றும் ரயான் ஆகியோர் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்