இலங்கை நோக்கி படையெடுக்கும்வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
19 தை 2025 ஞாயிறு 15:33 | பார்வைகள் : 323
இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 112, 415 பேர் நாட்டுக்கு வந்துள்ளனர்.
அதன்படி, இதுவரையான காலப்பகுதியில், இந்தியாவிலிருந்து 19,353 பேரும், ரஷ்யாவில் இருந்து 17,225 பேரும், பிரித்தானியாவில் இருந்து 9,178 பேரும் நாட்டுக்கு வந்துள்ளனர்.