மதுபான விடுதி காவலாளி சுட்டுக்கொலை!!
20 தை 2025 திங்கள் 07:14 | பார்வைகள் : 713
மார்செய் (Marseille) மாவட்டத்தில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், அங்கு பணிபுரிந்த பவுன்சர் (பாதுகாவலர்) சுட்டுக்கொல்லப்பட்டார்.
அங்குள்ள FaraNight என்னும் பிரபலமான இரவு விடுதி ஒன்றின் வாசலி, நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. மகிழுந்து ஒன்றில் வந்திறங்கிய ஆயுததாரி ஒருவர், ,அங்கிருந்த காவலாளியை நோக்கி இரண்டு தடவைகள் துப்பாக்கியால் சுட்டுள்ளார். நீண்ட குழலை கொண்ட கலாஷ்னிகாவ் வகை துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், 37 வயதுடைய அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் மகிழுந்து ஒன்றில் தப்பிச்சென்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.