ட்ரம்ப் வருகை - உக்ரைன் வீரர்கள் கவலை
20 தை 2025 திங்கள் 10:34 | பார்வைகள் : 395
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் இன்று பதவியேற்க உள்ள நிலையில், அவர் என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பார் என்பது குறித்து அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
இதற்கிடையில், ட்ரம்பின் வருகை, ரஷ்ய உக்ரைன் போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் வீரர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
போரில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிறார் உக்ரைனுக்காக போரிடும் வீரர் ஒருவர்.
காரணம், ரஷ்ய உக்ரைன் போரை, தான் முடிவுக்குக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்துள்ளார் இன்று அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் ட்ரம்ப்.
ஆனால், அவர் எப்படி போரை முடிவுக்குக் கொண்டுவரப்போகிறார் என்பது யாருக்கும் தெரியாது.
என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையில் ட்ரம்ப் சமரசம் செய்யலாம் என கருதப்படுகிறது. ஆனால், அந்த சமரசத்தால், உக்ரைன் தனது நாட்டில் சில இடங்களை விட்டுக்கொடுக்க அழுத்தம் கொடுக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
எனவே, இந்தப் போரின் முடிவு நியாயமானதாக இருக்கவேண்டும் என்கிறார் உக்ரைன் தளபதிகளில் ஒருவராக மேஜர் Vladyslav Tovstii, (28).
என்னைப் பொருத்தவரை நியாயமான சமாதானம் என்பது எங்கள் நாட்டை எங்களுக்குத் திருப்பிக் கொடுப்பதுதான், அதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார் அவர்.
அதாவது, ட்ரம்ப் இரு நாடுகளுக்கும் சமரசம் செய்ய முயற்சித்தால், சமாதானத்துக்காக தங்கள் நாட்டின் சிறு பகுதியையும் இழக்க உக்ரைன் தயாராக இல்லை.
ட்ரம்ப் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும், குறைந்தபட்சம் இன்னும் சில மணி நேரமாவது!