Paristamil Navigation Paristamil advert login

ஈஃபிள் கோபுரத்துடன் 'செல்ஃபி' எடுக்க சிறந்த ஐந்து இடங்கள்!!

ஈஃபிள் கோபுரத்துடன் 'செல்ஃபி' எடுக்க சிறந்த ஐந்து இடங்கள்!!

29 பங்குனி 2018 வியாழன் 12:30 | பார்வைகள் : 18201


இப்பதிவு நேற்றைய பதிவின் தொடர்ச்சி. அதை இன்னும் படிக்கவில்லை என்றால்... கீழே 'இணைப்பு' உள்ளது... படித்துவிட்டு தொடருங்கள்..
 
03) PONT DE BIR-HAKEIM
 
இந்த இடம் மிக மிக அழகானதொரு இடம். ஆனால் புகைப்படக்காரரின் திறமையும் சளைக்காமல் இருக்கவேண்டும். இந்த பகுதி திருமண உடையுடன் கூடிய புகைப்படங்கள்.. காதலர்களின் புகைப்படங்கள் எடுக்க மிகச்சிறந்த இடம். 
 
PONT DE BIR-HAKEIM பாலத்தின் துண்களும், அதில் தொங்கிக்கொண்டிருக்கும் விளக்குகளும் மிக சிறந்த 'வர்ணத்தை' தோற்றுவிக்கிறது. திருமண ஜோடிகளின் புகைபடங்கள் எடுக்கவேண்டுமென்றால் செயற்கை ஒளியும் தேவை. அதற்குரிய ஆயத்தங்களுடன் செல்லுங்கள். குறிப்பாக நண்பகல் வேளையில் பாலத்துக்கு மேலே வீசும் சூரிய ஒளியும், கீழே தெரியும் ஈஃபிளும்.. 'பிரம்மாதம் போங்கள்..!'
 
இங்க : Pont de Bir-Hakeim, Quai de Grenelle, Paris.
 
04) RUE DE L’UNIVERSITÉ
 
பரிசின் Avenue de la Bourdonnais வீதியின் முனையும் Rue de l’Université வீதியின் முனையும் சந்திக்கும் இந்த புள்ளிதான் இப்பட்டியலில் அடுத்து இடம்பெறுவது. 
 
இரு புறங்களிலும் கட்டிடங்கள்... அதை ஒட்டி பச்சை மரங்கள்.. அதன் பின்னால் கப்பீரமாய் ஈஃபிள்.. ஸ்பெஷலாக, 'நேரே' தோன்றியிருக்கும் ஈஃபிள்... இரவோ பகலோ... உங்கள் செல்ஃபிக்கு ஊரே சேர்ந்து 'லைக்ஸ்' போட்டு குவிக்கும்..!! 
 
கவனிக்க, இங்கு பகலில் புகைப்படம் எடுப்பதென்றால் உங்களுக்கு 'DSLR' ஒன்று வேண்டும். பின்னணி வெளிச்சம் அதிகமாக இருக்க.. உங்கள் மீது வெளிச்சம் குறைவாக இருக்கும். இந்த குழப்பம் எதுவும் இரவில் ஏற்படாது. 
 
இங்க : Rue de l’Université, Paris.
 
05) PONT ALEXANDRE III
 
இந்த பட்டியலில் இறுதியும், ஆகச்சிறந்த புகைப்படம் எடுக்ககூடிய 'லொக்கேஷன்'னாக இது உள்ளது. 
 
மெல்லிய நீலத்திலான வானம்... அடர்த்தியான நீலத்திலான சென் நதி..அதை ஒட்டி நேர்த்தியான மேம்பாலம்... அதன் பின்னால் 'ஜிவ்'வென ஈஃபிள்... இதற்கெல்லாம் முன்னால் நீங்கள்... வேறு லெவல் புகைப்படம் ஒன்றை மிக அசால்ட்டாக தட்டிச்செல்லலாம்...  ஈஃபிள் கோபுரம் சற்று தொலைவில் தெரிவதால் முழு கோபுரத்தையும் உங்கள் மொபைல் திரைக்குள்ளே அடக்கலாம் என்பது மற்றுமொரு வசதி!! 
 
இங்க : Pont Alexandre III, Paris. 
 
இன்னும் பல இடங்கள் இருந்தாலும், இவை சிறந்தவையாக எமக்கு தோன்றியது. உங்களுக்கும் பிடித்திருந்தால் இப்பதிவின் 'லிங்'குடன் பேஸ்புக்கில் பகிரலாமே...??!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்