பசில் ஜோசப் இயக்கத்தில் சூர்யா…?
20 தை 2025 திங்கள் 14:34 | பார்வைகள் : 150
சூர்யா நடிப்பில் கடைசியாக கங்குவா திரைப்படம் வெளியானது.அடுத்தது 2025 மே 1ஆம் தேதி இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ரெட்ரோ திரைப்படம் வெளியாக தயாராகி வருகிறது. மேலும் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் ஏகப்பட்ட இயக்குனர்களிடம் கதை கேட்டு வரும் சூர்யா, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரும்புக்கை மாயாவி எனும் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். கடந்த சில வருடங்களாகவே இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது இரும்புக்கை மாயாவி திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்க போவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தான் நடிகர் சூர்யா, மலையாளத்தில் மின்னல் முரளி என்ற சூப்பர் ஹீரோ படத்தை இயக்கிய பசில் ஜோசப்பிடம் கதை கேட்டிருப்பதாக தகவல் வெளியானது அதன்படி பசில் ஜோசப் சூர்யாவிடம் சொன்ன கதையானது சூப்பர் ஹீரோ கதை என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் சூர்யா – பசில் ஜோசப் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. எனவே சூர்யாவின் 47 வது படமாக உருவாக இருப்பதாக சொல்லப்படும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகளும் வெளியாகும் என நம்பப்படுகிறது.