விஜய் சேதுபதி பிக்பாஸிலிருந்து விலகுகிறாரா?
20 தை 2025 திங்கள் 14:42 | பார்வைகள் : 191
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விஜய் சேதுபதி விலகுகிறாரா? என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி பரவி வருகின்றன. விஜய் சேதுபதியின் நேற்றைய பேச்சின் மூலம் இது தொடர்பான உண்மையை அறிந்துகொள்ள முடியும்.கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி. மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
கடந்த 7 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் விலகிய நிலையில் இந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (ஜன.19) இந்நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார் என அறிவிக்கப்பட்டு அத்துடன் பிக்பாஸ் 8வது சீசன் நிறைவு பெற்றது. இதில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி அடுத்த சீசனையும் தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வந்தது. நேற்று நடைபெற்ற இறுதி நிகழ்வில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி எப்படி வந்தார் என்பது குறித்த காணொலி ஒளிபரப்பப்பட்டது.
இந்த வீடியோவின் இறுதியில், 'ஆட்டம் இன்னும் முடியல…உங்க எல்லோரையும் அடுத்த வருஷம் சந்திக்கிறேன்' என விஜய் சேதுபதி பேசியிருந்தார். அதன்படி அடுத்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குவார் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.