Paristamil Navigation Paristamil advert login

X சமூகவலைத்தளத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள Le Monde !!

X சமூகவலைத்தளத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள Le Monde !!

20 தை 2025 திங்கள் 15:49 | பார்வைகள் : 696


பிரெஞ்சு தினசரி பத்திரிகையான Le Monde, எலான் மஸ்கின் X சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் நெருங்கிய நண்பராக இருக்கும் எலான் மஸ்க், டுவிட்டர் என அறியப்பட்ட X எனும் சமூகவலைத்தளத்தை சில வருடங்களுக்கு முன்னர் வாங்கியிருந்தார். அதன் பின்னர், குறித்த சமூகவலைத்தளம் மிக தீவிர செயற்பாடுகளுக்கு துணை போவதாக குற்றம் சாட்டப்பட்டது. பல பிரபலங்கள் அதில் இருந்து வெளியேறியும் இருந்ததனர்.

இந்நிலையில், பிரெஞ்சு பத்திரிகையான Le Monde, தங்களது செய்திகளையோ, வேறு எந்த பதிவுகளையோ X தளத்தில் பகிரமாட்டோம் என அறிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்