போர் அற்ற இரவை களித்த காசா மக்கள்

20 தை 2025 திங்கள் 15:54 | பார்வைகள் : 6566
2023 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பை குறி வைத்து காசாவின் மீது இஸ்ரேல் போர் தொடுக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் இரு தரப்புக்களும் தீவிர தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
2023 ஒக்டோபர் 7 ம் திகதி போர் ஆரம்பித்த பின்னர் முதல்தடவையாக நேற்றிரவு நிம்மதியாக உறங்கியதாக தெரிவித்துள்ள காசா மக்கள் தங்களால் இதனை நம்பமுடியாமலுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
யுத்த ஆரம்பித்தவேளை பல்கலைகழக மாணவனாக காணப்பட்ட ,பின்னர் ஊடகவியலாளராக மாறிய மஹ்மூட் ரொஸ்டொம் யுத்தம் ஆரம்பித்த முன்னர் முதல்தடவை நிம்மதியாக உறங்கினோம் என தெரிவித்துள்ளார்.
எங்கும் எப்போதும் எந்தநேரத்திலும் குண்டுகள் விழுந்து வெடித்ததால் யுத்தத்தின் போது என்னால் நிம்மதியாக உறங்கமுடியவில்லை, என பிபிசிக்கு தெரிவித்துள்ள அவர் பாதுகாப்பாக உணர்ந்ததால் நேற்று நான் நிம்மதியாக உறங்கினேன் கடந்த 470 நாட்களில் நேற்றே நான் நிம்மதியாக உறங்கினேன் என தெரிவித்துள்ளார்.
நான் கண்விழித்ததும் எனது அயலில் உள்ளசிறுவர்கள் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள் நான் அதிர்ச்சியடைந்தேன்,யுத்தத்திற்கு முன்னர் போல சிறிய உணவுபண்டங்களை விற்பவர்களை நான் பார்த்தேன் மீண்டும் பிறந்தது போலயிருந்தது என அவர்தெரிவித்துள்ளார்.
அச்சமின்றி பதற்றமின்றி உறக்கத்திலிருந்து கண்விழித்தேன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை என தெரிவித்துள்ள சபா முகமட் என்பவர் என்னால் இதனை நம்பமுடியவில்லை பறவைகளின் சத்தம் இனிமையாகயிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.ஷ
இவர் கான் யூனிசில் முகாமில் வசித்துவருகின்றார், எனது அழகானவீடு முற்றாக அழிந்துவிட்டது,எனினும் நான் அமைதியை மகிழ்ச்சியை அனுபவிப்பேன் என தெரிவித்துள்ள அவர் இன்னமும் துயரத்திற்கும் கவலைக்கும் இடமுள்ளது அது என்றென்றும் நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1