ஈஃபிள் கோபுரத்துக்குள் மறைந்துள்ள மர்மப்பெண்..!!
27 பங்குனி 2018 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 21067
ஈஃபிள் கோபுரத்தின் உச்சியில், Gustave Eiffel தங்குவதற்கு ஒரு அறை உருவாக்கியிருந்தார். அது நமக்கு தெரிந்ததுதான்.
அந்த அறையின் உள்ளே Gustave Eiffel மற்றும் அவரது நண்பர் தோமஸ் ஆல்வா எடிசன் இருவம் சேர்ந்து அளவளாவிக்கொள்வார்களாம். அந்த காட்சியை மெழுகு சிலையாக்கி பார்வைக்கு வைத்துள்ளது அரசு.
சாம்பல் நிறத்தில் ஒரு 'சூட்' அணிந்து, காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு ஸ்டைலா, கெத்தா ஈஃபிளும், கறுப்பு நிறத்தில் 'சூட்' அணிந்துகொண்டு அறிவாய் அமைதியாய் எடிசனும் இருந்து பேசிக்கொண்டிருக்க... பின்னால் ஒரு பெண் இவர்கள் இருவரும் பேசிக்கொள்வதை கண்டும் காணாமலும், வெளியே பரிசின் அஸ்தமனத்தை கண்டு இரசிக்கின்றாள். யார் அந்த பெண்??
சிவப்பு நிற நீண்ட கவுண், வட்டத்தொப்பி, அதன் சூடியுள்ள ப்ளாஸ்டிக் பூக்கள்... 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தின் நாகரீகத்தை பறைசாற்றுகிறது.
அவர் பெயர் Claire Eiffel. திரு Gustave Eiffel அவர்களின் மகள். 1863 ஆம் வருடம் ஓகஸ்ட் 19 ஆம் திகதி Clichy (Hauts-de-Seine, IDF) இல் பிறந்தார். இவருக்கு இரு சகோதர்களும் இரு சகோதரிகளும் உள்ளனர். இருப்பினும், ஈஃபிள் கோபுர அறையில் இருப்பது Claire Eiffel மட்டுமே.
அடுத்தமுறை ஈஃபிளுக்குச் செல்லும் போது, அழகுப்பெண்ணை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாருங்கள்..!
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan