Paristamil Navigation Paristamil advert login

புற்றுநோய்க்கான மருந்துகள் மீளப்பெறப்படுகின்றன!!

புற்றுநோய்க்கான மருந்துகள் மீளப்பெறப்படுகின்றன!!

21 தை 2025 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 922


புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் ”Pomalidomide” மருந்துகள் மீளப்பெறப்படுவதாக மருந்துகளின் பாதுகாப்புக்கான தேசிய நிறுவனம் (L'Agence nationale de sécurité du médicament - ANSM) அறிவித்துள்ளது. 

ஜனவரி 20, நேற்று திங்கட்கிழமை இந்த அறிவித்தலை ANSM அறிவித்துள்ளது. சிவப்பு - வெள்ளை நிறங்கொண்ட Pomalidomide வில்லைகளில் இறுதியாக விநியோகிக்கப்பட்ட தொகுதியில் உற்பத்தி குறைபாடு இருப்பதாகவும், லியோன் மாவட்ட ஆய்வுகூடம் இதனை அடையாளம் கண்டு, அறிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

1, 2, 3 மற்றும் 4 மில்லிகிராம் அளவுடைய அனைத்து தொகுதி வில்லைகளையும் மருந்தகங்களில் கொடுத்து, புதிய வில்லைகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, பெற்றுக்கொண்ட புதிய வில்லைகளை மருந்துச்சீட்டின் அறிவுத்தலின் படி பயன்படுத்துமாறும் தெரிவிக்கப்படுகிறது.